தொப்பூர் காட்டில் ரூ 40 லட்சம் தந்தங்கள் பறிமுதல்... முன்னாள் ராணுவ வீரர் கைது!
தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள தொப்பூர் காட்டில் ரூ 40 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தங்களை அதிரடிப் படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தருமபுரி அருகேஉள்ள ஒகேனக்கல்லில் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் ஒரு பிரிவினர் தொப்பூர் காட்டுப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது 3 பேர் தலையில் மூட்டையை தூக்கி கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அதிரடிப்படை போலீசாரைப் பார்த்ததும் மூட்டையைப் போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது அதிரடிப்படை போலீசார் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.
அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்த போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மறுகாலம்பட்டியைச் சேர்ந்த குப்புசாமி (48) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் முன்னால் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வீசிச் சென்ற மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது அதில் 23 கிலோ யானைத் தந்தம் இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ. 40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் வனத் துறையினரிடம் அந்த தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும் குப்புசாமியை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
பிடிபட்ட தந்தங்களை ஹைதராபத்தில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications