ரூ. 200க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டம்-சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது

தமிழகத்தில் கடந்த வாரம் வரை 7 பேர், பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்து போனார்கள். அதன்பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மோகனவேலு, பன்றிக்காய்ச்சல் நோயினால் உயிரிழந்தார்.
பின்னர், நெல்லையை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில்,
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பன்றிக்காய்ச்சலுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி போடுவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை திங்கட்கிழமை முதல் போடப்படும்.
இந்த தடுப்பூசியை யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருப்போர், சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோர் போன்ற நோய்த்தடுப்பு சக்தி குறைந்தவர்கள், போட்டுக் கொள்வது உகந்தது. சென்னைக்குப் பிறகு மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. பொதுவாகவே, சிறிய வயதினருக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். தனியார் மருத்துவமனைகளில், அரசு அங்கீகரித்துள்ள 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் நல்ல மருத்துவ வசதிகள் இருப்பதால், வெளி மாநிலத்தில் இருந்தெல்லாம் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதனால் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 50 ஆயிரம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுபோல், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட அந்த நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளோம். பன்றிக்காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஸ்டேன்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களையும், மற்ற மாவட்டங்களில் அரசு தலைமை மருத்துவமனைகளையும் பொதுமக்கள் அணுகினால் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தடுப்பூசிக்கு ரூ.200- சொட்டு மருந்துக்கு ரூ.150
தடுப்பூசி போடும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
நாசே வாக் மற்றும் வாக்சி ஃப்ளூ ஆகிய தடுப்பூசிகளை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்து மற்றும் ஊசி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பதாக தகவல் வருகிறது. அங்கு அரசு மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதால் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் அதிகம் பேருக்கு இருப்பதாக கருதுகிறோம்.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசி, மருந்துகள் வழங்கப்படுகின்றன. மூக்கு வழியாகவும், ஊசி வழியாகவும் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. தடுப்பு ஊசி அல்லது மூக்கில் மருந்து போட்டு கொண்டவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு நோய் தாக்கம் இருக்காது.
மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அதன் விலை ரூ.150. ஊசி வழியாக செலுத்தப்படுகிற தடுப்பு மருந்துக்கு ரூ.250 கட்டணமாகும். பன்றி காய்ச்சலுக்குரிய தடுப்பு ஊசி, மருந்துகள் அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்பட மாட்டாது.
எல்லா தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை, சிகிச்சைகள் அனைத்து இலவசமாக வழங்கப்படுகிறது.
பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்துக்கு கட்டணம் வசூலித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும். மேலும் பல தவறு களுக்கு காரணமாக அமைந்து விடும் என்பதால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
கிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்த விலையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக விற்கப்படும்.
பன்றி காய்ச்சல் அறிகுறி, நோய் தாக்கம் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சிலர் தனியார் மருத்துவ மனை களில் சிகிச்சைக்கு சென்று நோய் தாக்கம் அதிகமாகி பின்னர் அரசு மருத்துவ மனைக்கு வருகிறார்கள். ஆரம்ப கட்டத்தில் வந்தால் குணமாக்கலாம்.
அரசு ஆஸ்பத்திரிகள், தாலுகா, மாவட்ட மருத்துவ மனைகளில் பன்றி காய்ச்ச லுக்கு போதுமான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் உள்ளன.
கடந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் 3047 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 10 பேர் உயிர் இழந்தனர். இறந்தவர்கள் கூட பன்றி காய்ச்சல் நோயால் மட்டும் உயிர் இழக்கவில்லை. வேறு சில நோய்கள் இருந்துள்ளது.
இந்த ஆண்டு 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 பேர் உயிர் இழந்துள்ளனர். சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கையால் பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு தடுப்பூசியும் (வாக்சிபுளூ-எஸ்), மற்றவர்களுக்கு மூக்குவழியாக சொட்டு மருந்தும் (நேசோவேக்) போடப்படும். கிங் இன்ஸ்டிடியூட்டில் தடுப்பூசிக்கு ரூ.200-ம், சொட்டு மருந்துக்கு ரூ.150-ம் வசூலிக்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications