தமிழகத்தில் பந்த்துக்கு தடை தொடர்கிறது: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் திமுக சார்பில் 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து அதிமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் பந்த் நடத்த 2007 செப்டம்பர் 30ம் தேதி தடை விதித்தது. இதையடுத்து முழு அடைப்புப் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக திமுக மாற்றிக் கொண்டது.

இந் நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.எஸ். கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று வெளிட்ட உத்தரவில்,

தமிழக பந்த் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் வரை, உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் பந்த் நடத்த விதித்த தடை அமலில் இருக்கும் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+