ரயில் நிலையத்தில் பொறியியல் மாணவியை 14 இடங்களில் கத்தியால் குத்திய காதலன்
சென்னை: காதல் தகராறில் பொறியியல் கல்லூரி மாணவியை ரயில் நிலையத்தில் வைத்து உடல் முழுவதும் 14 இடங்களில் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அல்பனா (17) சென்னையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
அல்பனாவின் சொந்த ஊரைச் சேர்ந்த ராஜன்குமார் (23) எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் ஒரு ஹோட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் சொந்த ஊர் என்பதால் பழக்கமாகியுள்ளன்ர். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் திடீரென ராஜன்குமாரிடமிருந்து அல்பனா விலகிச் செல்ல ஆரம்பித்தார்.
இந் நிலையில் நேற்று அல்பனாவை மீனம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வரச் சொல்லி ராஜன் பேசினார். அப்போது காதல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தான் கொண்டு வந்த கத்தியால் அல்பனாவை சரமாரியாக குத்தினார் ராஜன்குமார். இதில் முகம், கழுத்து உள்பட உடல் முழுவதும் 14 இடங்களில் கத்திக் குத்து காயம் விழுந்ததில் அல்பனா அங்கேயே சரிந்து விழுந்தார்.
இதைப் பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ராஜன்குமாரை விரட்டித் சென்று பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அல்பனா தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications