சிவில் சப்ளை அதிகாரி மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து 2 நாளாக உறவினர்கள போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்த சிவில் சப்ளை குடோன் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக நேற்று அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீளவிட்டானில் உள்ள சிவில் சப்ளை குடோனில் துணை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த குடோனில் பொருட்கள் திருட்டு போனது தொடர்பாக சிப்காட் போலீசில் முருகன் புகார் செய்தார். பின்னர் புகார் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 7-ம் தேதி காலை வேலைக்கு சென்ற முருகன் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 11-ம் தேதி அன்று காலை இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் முருகனின் மரணத்திற்கு காரணம் விஷம்தான் என்று உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் முருகனின் உடலை பெற மறுத்து மருத்துவக் கல்லூரி முன்பு அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications