பெங்களூர் குண்டுவெடிப்பு: மதானியின் சிறைக் காவல் செப். 28 வரை நீட்டிப்பு
பெங்களூர்: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் சிறைக் காவல் செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிற குற்றவாகளின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவர்கள் முதலாவது கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் ஹூலகி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதானி மட்டும் ஆஜர்படுத்தப்படவில்லை. அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார் மாஜிஸ்திரேட்.
பின்னர் மதானி மற்றும் மற்ற 14 பேரின் சிறைக் காவலை செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும், மதானிக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குமாறும் விசாரணை அதிகாரி ஓம்காரய்யாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் மதானி உள்பட 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications