ஈபிள் கோபுரத்துக்கு குண்டு மிரட்டல்-ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

நேற்று இரவு இந்தக் கோபுரத்திலும் அதை ஒட்டியுள்ள பூங்கா மற்றும் பொழுது போக்கு மையத்தில் சுமார் 25,000 பேர் இருந்த நிலையில் கோபுரத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து கோபுரத்தில் இருந்த 2,000 பேரையும் சுற்றுப் பகுதியில் இருந்த 23,000 பேரையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனை நடத்தினர்.
ஈபிள் கோபுரம் முழுவதும் இரவு முழுவதும் சோதனை நடந்தது. ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
அதே போல நாட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின் அருகே உள்ள புனித மைக்கேல் ரயில் நிலையத்திற்கும் குண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டு சோதனை நடந்தது. அங்கும் குண்டு ஏதும் சிக்கவில்லை. இந்த ரயில் நிலையத்தில் 1995ம் ஆண்டு அல்ஜீரிய தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் பாரீஸ் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. நகரம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications