மீண்டும் பாகிஸ்தான் அரசியலில் கால் வைக்கும் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாகவும், அதிபராகவும் இருந்த பர்வேஸ் முஷாரப் (67) தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
கிட்டத்தட்ட நாட்டை விட்டு விரப்பட்ட நிலையில் உள்ள அவர் மீண்டும் பாகிஸ்தான் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் 2013ம் ஆண்டு பொதுத் தேர்தல் வரும் நிலையில் அதில் முஷாரப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் முன்பே துவங்கிய அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை தற்போது அதிகாரப்பூர்வமாக்க திட்டமிட்டிள்ளார்.
இந்தத் தகவலை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அவர் லண்டனில் அறிவிக்கவுள்ளார்.
இதையடுத்து அக்டோபர் மாதம் 3ம் தேதி பிர்மிங்ஹாமில் பொதுக் கூட்டம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார். இப்போது முஷாரபின் கட்சி செயலற்றுக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications