சிம்லாவில் மழை-பிரியங்காவி்ன் பங்களா கட்டுமானப் பணிகள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

Priyanka Vadra
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் உள்ள குளு குளு நகரான சிம்லாவில் காங்கிலஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வாத்ரா சொகுசு பங்களா ஒன்றை கட்டிக் கொண்டிருக்கின்றார். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்து நிற்கிறதாம்.

இந்த பங்களா உருவாகும் நிலத்தின் மதிப்பு ரூ. 47 லட்சம் ஆகும். இந்த நிலத்தை பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கடந்த 2007-ம் ஆண்டு வாங்கினார். இந்த பங்களாவை பிரியங்கா பார்த்து பார்த்து கட்டி வருகிறார். அவர் கண்காணிப்பில் தான் கட்டுமானப் பணி நடக்கின்றது. இதற்காக அவர் அடிக்கடி சிம்லா செல்கிறார்.

இரண்டு மாடிகள் கொண்ட அந்த பங்களாவில் தற்போது மேல் கூரை அமைத்து வருகின்றனர். இதற்கு கல் மற்றும் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிம்லாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் கூரை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கூரைக்காக பயன்படுத்தப்பட்ட கற்களில் விரிசல் விழுந்து மழை நீர் வீட்டுக்குள் வழிகிறது. இதனால் உள் அலங்காரப் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கற்கள் சேதமடைந்துள்ளதால் மரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம் பிரியங்கா. மேலும், வீட்டின் உள் அமைப்பையும் மாற்றவிருப்பதால் பங்களா அடுத்த ஆண்டு தான் தயாராகும் போல் இருக்கிறது. இதனால் டென்ஷனாக உள்ளாராம் பிரியங்கா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+