ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம்-வென்றார் அர்ஜூன் முண்டா
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நேற்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தார் முதல்வர் அர்ஜூன்
முண்டா.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது பாஜக. முதல்வராக அர்ஜூன் முண்டா பதவியேற்றுள்ளார்.
நேற்று அவர் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 45 வாக்குகளும், எதிராக 30 வாக்குகளும் கிடைத்தன. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, நியமன உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து 81 ஆகும். ஹாதியா தொகுதி எம்.எல்.ஏ கோபால் சரண் நாத் சஹதியோ காலமானதால் அத்தொகுதி காலியாக உள்ளது.
முன்னதாக அமைச்சர் ஹேமந்த் சோரன், ஒரு வரியில் அமைந்திருந்த நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். இவர் சிபு சோரனின் மகன் ஆவார். இவர் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications