மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தால் கடனாளிகளாகும் ஏழைகள்: ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு இரண்டரை கோடி ரூபாய் அளவில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இதன் கீழ் பயனடைந்தவர்களில் பாதி பேர் இறந்திருப்பர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதையும், இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற முக்கியமான அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், இந்தத் திட்டத்தில் பயன் பெறக்கூடியவர்கள் அரசால் குறிப்பிடப்பட்ட வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்களும்,
ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே என்பதையும், இந்தத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு, நான்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே அரசால் அனுமதிக்கப்படுகிறது என்பதையும் மறந்து விட்டுப் பேசுகிறார் அமைச்சர்.
இது மட்டுமல்லாமல், மேற்சொன்ன எந்த அறுவை சிகிச்சையையும் ஒரு லட்சம் ரூபாய்க்குள் மேற்கொள்வது என்பது இயலாத காரியம் என்பதையும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் செலவை ஏழை, எளிய மக்கள் தான் ஏற்க வேண்டும் என்பதையும் மறைத்துவிட்டுப் பேசியிருக்கிறார் அமைச்சர்.
இந்தத் திட்டத்தின் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடனாளிகளாக ஆக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.
பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா, காலரா, டைபாய்டு மற்றும் இதர மர்ம நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போகிறார்கள். இந்த நோய்களுக்கு எல்லாம் காப்பீட்டுத் திட்டத்தில் நிவாரணம் உண்டா என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது.
தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் தமிழகத்தில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து குறித்து சில நாட்களுக்கு முன்பு சென்னை, அரசு பொது மருத்துவமனை முதல்வரிடம் கேட்கப்பட்டபோது, பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி மருந்தை விற்பனை செய்ய தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றும், “போலியோ சொட்டு மருந்து போல் இலவசமாக அளிக்க அரசு கொள்கை முடிவு எடுத்தால் தான் அரசு மருத்துவமனைகளில் வழங்க முடியும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ, “பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது, இந்தத் தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டால் இந்த நோயிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்“ என்றும், “அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கிடைக்காது" என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் 600 ரூபாய் வரை ஏழை, எளிய மக்கள் செலவழிக்க வேண்டும். இந்தச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக 3,889 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியிலிருந்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க பணம் ஒதுக்க முடியாதா?.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications