இலங்கை: மட்டக்களப்பில் டைனமைட்டுகள் வெடித்து 2 சீனர்கள் உள்பட 60 பேர் பலி

சாலை அமைக்கும் பணிக்காக 3 கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதி காவல் நிலையத்தின் அருகே இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் ஒரு கண்டெய்னரில் இருந்த டைனமைட்டுகள் திடீரென வெடித்துச் சிதறியதாகவும்,
இதைத் தொடர்ந்து மற்ற இரு கண்டெய்னர்களில் இருந்த டைனமைட்டுகளும் வெடித்து சிதறியதில் போலீசார், இரு சீனர்கள் உள்பட 60 பேர் பலியாகிவிட்டதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலா கூறியுள்ளார்.
இந்த டைனமைட்டுகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா பல ரகசிய ராணுவ தளங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தப் பகுதிகளில் சீனர்களின் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவர்கள் சாலை, பாலங்கள், அணைகள் கட்டவே வந்துள்ளதாக இலங்கை கூறுகிறது.
இந் நிலையில் இந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஓவர்சீஸ் ஹோட்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் இலங்கை கூறியுள்ளது.
இது ஒரு விபத்து தான் என்றும், இதில் சதி ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் கரடியனாறு காவல் நிலையம் தரைமட்டமாகிவிட்டது. அதிலிருந்த பெரும்பாலான போலீசார் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பலியானோர் எண்ணிக்கையும் 70 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் நடந்த இடம் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து கரடியனாறு பகுதிக்கு கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications