அயோத்தி நில விவகாரம்-இன்று இறுதிக் கட்ட சமரச முயற்சி

இந்த வழக்கில் வரும் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எந்தத் தரப்புக்கு சாதகமாக இருந்தாலும் மதக் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை, கலவரம் ஏற்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் கூறியுள்ளன.
இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு இறுதிக் கட்டமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிமன்றம் முயற்சிக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் கடந்த 13ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி டி.வி. சர்மா, வழக்கில் வாதிடும் அனைத்து வழக்கறிஞர்களும் செப்டம்பர் 17 (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது பிரச்சனையைச் சமரசமாக தீர்த்துக் கொள்ள நீதிபதிகள் முயற்சி மேற்கொள்வர்.
இந் நிலையில் இந்தச் சமரச முயற்சி குறித்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், அதன் அகில உலர பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே இறுதிக் கட்ட சமரச முயற்சி என்ற பெயரில் எக் காரணத்தைக் கொண்டும் தீர்ப்பை ஒத்திவைக்கக் கூடாது என்று அகில பாரத ஹிந்து மகாசபாவும் வக்ஃப் சன்னி மத்தியக் குழு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அறிவித்தபடி வரும் 24ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அமைதி காக்க மத்திய அரசு வேண்டுகோள்:
இந் நிலையில் இந்த விவகாரத்தில் வரும் 24ம் தேதி வெளியாகும் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில், அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அளிக்கவிருக்கும் தீர்ப்பு மதிக்கக் கூடியதே. இருப்பினும் அதுவே இறுதியான முடிவு அல்ல. அது சட்டரீதியிலான நடவடிக்கையின் ஒரு பகுதியே. தீர்ப்பு இருதரப்பாருக்கும் திருப்தி ஏற்படுத்துவதாக இருந்தால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். அதில் ஒரு தரப்பினருக்குத் திருப்தியில்லை என்றாலும் அந்தத் தரப்பினர் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். எல்லா மதங்களும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் உயர்ந்த பண்பாடு எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் வகையில், தடங்கல் ஏற்படுத்தும் வகையில் நமது இலக்கை நோக்கி முன்னேறுவதிலிருந்து நம்மை திசை திருப்பும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அமைதி காக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications