பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு: கீழே விழுந்து மண்டை உடைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் இரு வாலிபர்கள் செயினை பறித்தபோது அவர் கீழே தவறிவிழுந்து மண்டை உடைந்தது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த அசோக்குமார்., தனது மனைவி பாரதியுடன் தேனாம்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியே இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் பாரதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.
இதில் பாரதி நிலை தடுமாறி கீழே விழுந்ததி்ல் அவரது மண்டை உடைந்தது. பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications