திமுகவுடன் கூட்டணிக்கு நாங்கள் தயாரில்லை-பாஜக
கரூர்: அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. தமிழகம் முழுக்க டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி பலர் இறந்துள்ளனர். இதற்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை என்பதை சுகாதார அமைச்சர் பன்னீர் செல்வமே ஒப்புக்கொண்டுள்ளார். இது போன்ற அவல நிலை தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதில்லை.
இலவச டிவி, அடுப்பு வழங்க முடிகிறது. ஆனால், மருந்து மட்டும் இலவசமாக அளிக்க முடியவில்லை. மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும்.
நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மாநிலம் முழுவதும் சமநீதி கோரி, தாமரை யாத்திரை நடத்தப்படும். ஜனவரி 29 ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
நூல் விலையேற்றம் காரணமாக கரூரின் முக்கிய தொழிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும். அல்லது சலுகை விலையில் நூல் வழங்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கரூரில் அரசு கஞ்சி தொட்டி திறக்க வேண்டியிருக்கும்.
காஷ்மீர் பிரச்னைக்கு காங்கிரஸால் தீர்வு காண முடியவில்லை. தற்போது அனைத்து கட்சியையும் அழைத்துள்ளது. ஆளும் தகுதியற்றவர்களே மத்திய, மாநிலத்தில் ஆட்சியில் உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். பாரதிய ஜனதா சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. வரும் தேர்தலில் கூட்டணி குறித்து தி.மு.க. பேச முன்வந்தாலும், அதற்கு பாரதிய ஜனதா தயாரில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications