'சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிட்டேன்!'
நெல்லை: பட்டமளிப்பு விழாவில் நடந்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டியவர்களுக்கு முறைப்படி சொல்லி விட்டேன் என்று நெல்லை அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் காளியப்பன் தெரிவித்தார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது துணைவேந்தர் காளியப்பன் அறைக்குள் புகுந்து திமுக எம்.எல்.ஏ மாலைராஜா தாக்கியதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் இதுவரை திமுக எம்.எல்.ஏ மீது ஒரு தூசி, துரும்பு கூட படவில்லை, அவர் மீது எந்து வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், அதிரடியாக சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் காளியப்பன். இந்தச் சூழ்நிலையில் நேற்று அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையொட்டி செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், துணைவேந்தர் பதவி என்பது உயரிய பதவியாகும். அதற்குரிய கண்ணியத்தை கடைசி வரை காத்துள்ளேன். என் பதவியின் கடைசி காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மக்களுக்கு தெரியும்.
பதவி நீட்டிப்பில் எனக்கு விருப்பம் இல்லை. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. இப்போதைக்கு பேராசிரியர் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன். மீதமுள்ள 8 ஆண்டுகளை ஆசிரியர் பணியிலே கழிக்க விரும்புகிறேன். என் பெயரில் வெளிவரும் சில யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications