சென்னையில் 3 ஆண் நர்ஸ்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியது
சென்னை: தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் 3 நர்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், கன்னியாகுமரி, திருவள்ளூர் என பல மாவட்டங்களிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ரூ. 200க்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ஏழை எளியோருக்கு இலவசமாக தடுப்பூசி போடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பன்றிக் காய்ச்சல் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபடும் 19 ஆயிரத்து 930 பொது சுகாதாரதுறைபணியாளர்கள், 18 ஆயிரத்து 854 மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஆண் நர்சுகளாக பணி புரியும் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தப் பரிசோதனையில் அவர்களில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிய வந்தது.
இவர்களில் முனிரத்தினம் என்பவர் தர்மபுரியைச் சேர்ந்தவர். ஜான்கனோலி ரத்தினம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். சுஜி சங்கீத்ராஜா வேலூரைச் சேர்ந்தவர். இவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications