தலைநகர் டெல்லியில் கன மழை: நகரமே வெள்ளக்காடானது
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை கொட்டித் தீர்த்த கன மழையால் நகரமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானம் மேக மூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று காலை முதல் இன்று காலை 8.30 மணி வரை 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. தெருக்கள் குளங்கள் போல் இருப்பதால் சிறிய கார்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றன.
நகரின் குறைந்த பட்ச வெப்ப நிலை 23.1 டிகிரி செல்சியஸ், அதிக பட்சம் 31 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் ஈரப்பதம் அதிக பட்சமாக 96 சதவிகிதமும், குறைந்த பட்சம் 66 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லி தயாராகி வரும் நிலையில், ஸ்டேடியங்கள் கட்டுவதில் தாமதம், ஏகப்பட்ட ஊழல்கள் உள்ளிட்ட குளறுபடிகள் தலை விரித்தாடி வரும் நிலையில், தொடர் மழையால் டெல்லி மேலும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications