அணு விஞ்ஞானி கானை அமெரிக்காவிடம் ஒப்படைக்க விரும்பிய முஷாரப்: முன்னாள் பிரதமர் புகார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பிரபல பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பேராவலாய் இருந்தார் என்று முன்னாள் பிரதமர் ஜபருல்லா கான் ஜமாலி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது ஜமாலி இந்த குற்றச்சாட்டை பற்றி கூறினார். அப்போது அவருடன் விஞ்ஞானி அப்துல் காதிர் கானும் உடன் இருந்தார்.
இது குறித்து ஜமாலி கூறியதாவது,
நான் பிரதமராக இருக்கையில் அதிபர் முஷாரப் என்னை அழைத்து விஞ்ஞானி கானை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடலாம் என்றார். இதையடுத்து நான் மந்திரி சபையைக் கூட்டி அதிபரின் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அதிபரிடம் அவர் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினேன். பாகிஸ்தான் அரசு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சம்மதிக்காது என்றும் கூறினேன் என்றார்.
விஞ்ஞானி கான் கூறுகையில், ஜமாலி கூறியவை உண்மை. ஜமாலி மென்மையான மனம் படைத்தவர். உண்மைக்குப் புறம்பாக நடப்பவரில்லை என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications