ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி பாதிக்காது-என்.எல்.சி்.
நெய்வேலி : ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி பாதிக்காது என்று என்.எல்.சி. நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து என்.எல்.சி. நிறுவனத்தின் நிர்வாகத் துறையின் கூடுதல் பொறுப்பாளரும், நிதித்துறை இயக்குநருமான ஆர்.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம ஊதியம் வழங்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பல்வேறு வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பதோடு, ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளிக்கும் அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் கூடுதலாக நாள் ஒன்றுக்கு ரூ. 270 முதல் ரூ. 300 வரை நிர்வாகம் செலவு செய்து வருகிறது.
நாட்டில் உள்ள மற்ற பொதுத்துறை நிறுவனங்களை விட என்.எல்.சி.-யில்தான் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
16-06-08 அன்று புது டெல்லியில் ஏற்பட்ட உடன்படிக்கையை அமல்படுத்த நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று மத்திய அரசின் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் நிலையை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தது.
ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்த்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். இது ஜனநாயக விரோதச் செயல்.
ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மின்சார உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications