கோவை, தர்மபுரி மருத்துவமனைகளில் ஐடி ரெய்டு
கோவை: கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பெருமளவில் இவர்கள் முறைகேடு செய்து வந்ததாக புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் பல நோயாளிகளிடம் பல கோடி அளவுக்கு கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கின்றன. ஆனால் வருமான வரித்துறைக்கான கணக்குகளை லட்சங்களில்தான் காட்டுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன. இதையடுத்து வருமான வரித்துறையினர்தனியார் மருத்துவமனைகளை கட்டம் கட்டி கண்காணித்தனர்.
நேற்று அதிரடி சோதனையில் குதித்தனர். கோவையில் உள்ள ராமகிருஷ்ணா, குறிஞ்சி, கொங்குநாடு ஆகிய தனியார் மருத்துவமனைகள், டயாபடீஸ் சென்டர், சோனா ஸ்கேன் சென்டர் ஆகிய இரு தனியார் மருத்துவ மையங்களிள் சோதனை நடந்தது. அப்போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரியில் உள்ள ஆர்.கே. மருத்துவமனை மற்றும் கிருஷ்ணன் என்பவருடைய குழந்தைகள் நல மருத்துவமனைகளில் 11 பேர் கொண்ட வருமான வரித்துறை குழு சோதனை நடத்தியது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications