கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு: கூட்டணி தொடரும் என திட்டவட்டம்

முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை தங்கபாலு சந்தித்துப் பேசினார். அவருடன் சட்டசபை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்சும் உடன் சென்றார்
அரை மணி நேர சந்திப்புக்கு பின் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வந்தேன். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து செயல்படும். எங்கள் சந்திப்பு அந்த அடிப்படையில்தான் நடந்திருக்கிறது.
கேள்வி: திமுக கூட்டணியை தொண்டர்கள் விரும்பவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கிறாரே?
தங்கபாலு: அன்னை சோனியா காந்தியும் தலைவர் கருணாநிதியும் எடுக்கிற முடிவுதான் இறுதியானது. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே வேறு யாரும் குறுக்கே கருத்துக்களைச் சொல்ல முடியாது. மற்ற விஷயங்களை யார் பேசினாலும் அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கூட்டத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தெளிவுப்படுத்தியிருக்கிறார். எனவே, காங்கிரஸ்-திமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். எங்கள் கூட்டணி 3ல் இரண்டு பங்கு வெற்றியைப் பெறும்.
கேள்வி: இளங்கோவன் பேசி வருவது குறித்து முதல்வர் தங்களிடம் கவலை தெரிவித்தாரா?
தங்கபாலு: அதைப்பற்றி நாங்கள் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமும் எழவில்லை என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications