ஆந்திராவில் தமிழக தம்பதி கழுத்தை அறுத்து படுகொலை: நகை-பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

நகரி: சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணவன்-மனைவி ஆந்திராவில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு அட்டூழியம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் அருகே கணபதி நகரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் சாமிநாதன் (59), பெரம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது 2வது மனைவி பரிமளா (49).

இருவரும் ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலுக்குச் சென்ற சாமிநாதனும், பரிமளாவும் வீடு திரும்பவில்லை.

இந் நிலையில் நேற்று காலை நகரி ரயில் நிலையம் அருகே ஏஞ்சிக்குப்பம் என்ற கிராமப் பகுதியில் இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிள்ளனர்.

பரிமளா அணிந்திருந்த 20 பவுன் நகைகளும், சாமிநாதன் வைத்திருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பிணங்கள் கிடந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+