காஷ்மீரில் பெண் தீவிரவாதிகள் ஊடுருவல்: ராணுவ உளவுப் பிரிவு எச்சரிக்கை
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 மாதமாக தொடர் வன்முறை சம்பவங்களில் 110 பொது மக்கள் பலியாகியுள்ள நிலையில் அங்கு லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பெண் தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
காஷ்மீர் பிரிவினை கோரி அங்கு பொது மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது வன்முறைகள் சற்று ஓய்ந்து வரும் நிலையில், மீண்டும் பிரச்சனையை சிக்கலாக்கும் முயற்சிகளில் லஷ்கர் ஏ தொய்பா ஈடுபட்டுள்ளதாக மத்திய, ராணுவ உளவுப் பிரிவுகள் எச்சரித்துள்ளன.
இதற்காக பெண் தீவிரவாதிகள் குழு காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரங்களில் பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபடும்போது, கூட்டத்துக்குள் புகுந்து தற்கொலை தாக்குதல்களை நடத்த பெண் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி கொடுத்துள்ளதாக ராணுவ உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு படை முகாம்கள், பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கும் சோதனைச் சாவடிகள் அருகில் வன்முறை நடக்கும்போது தற்கொலை தாக்குதல்களுக்கு பெண் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ள பெண் தீவிரவாதிகள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் தான் என்றும் பாகிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்று விட்டு அவர்கள திரும்பியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் தற்கொலை தாக்குதல் நடத்தக் கூடும் என்று ராணுவ உளவுத்துறை தனது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications