இந்தியா வருகை எதிரொலி-பல கூடை ஐஸ் வைக்கும் ஒபாமா!

அதிபரான பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் ஒபாமா. இந்த நிலையில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் ஒபாமாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தான் நவம்பரில் இந்தியா வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார் என்றார்.
இதற்கிடையே, ஐ.நா. கூட்டத்தில் பேசிய ஒபாமா இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்து பேசி ஐஸ் வைத்தார்.
ஒபாமா பேசுகையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடானா இந்தியாவில், ஜனநாயகம் மேலும் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. காலணி ஆதிக்கத்திலிருந்து மீண்டு சிறப்பான நிலையை நோக்கி வந்துள்ளது இந்தியா.
அமைதியான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய இந்தியாவுக்கு செல்வதில் பெருமைப்படுகிறேன். பல கோடி மக்கள், பல இன மக்கள் குழுக்கள் இணைந்து வாழும் இந்தியாவுக்கு விஜயம் செய்வது பெருமையாக இருக்கிறது என்றார் ஒபாமா.
தொடர்ந்து பேசிய ஒபாமா, இந்தோனேசியாவையும், அதன் ஜனநாயகத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.
அதேபோல நான் இந்தோனேசியாவுக்கும் செல்லவுள்ளேன். உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா, மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது என்றார்.
அமெரிக்க வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே போக வேண்டும். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அவுட்சோர்சிங் வாய்ப்புகளை அளிக்கக் கூடாது, அப்படி அளித்தால், வரிச் சலுகைகள் ரத்து என்பது உள்பட பல்வேறு கெடுபிடிகளை அமெரிக்க அரசு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் விசா நடைமுறையிலும் இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க இறங்கியுள்ளது.
இந்தியர்களும், சீனர்களும் நம்மை முந்தப் பார்க்கிறார்கள். எனவே அவர்களை வீழ்த்தும் வகையில் அமெரிக்கர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் ஒபாமா அடிக்கடி பேசி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வரப் போவதையொட்டி இந்தியாவைப் போல ஒரு நாடு உண்டா என்று பேசி ஐஸ் வைத்துள்ளார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications