மத்திய அரசின் மெத்தனம்... பிளாக்பெர்ரி 'எஸ்கேப்'!
சென்னை: சின்னதாக ஒரு இடைவெளி கிடைத்தாலும் அதில் விமானமே ஓட்டுவதில் கில்லாடிகள் வெளிநாட்டு நிறுவனங்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
'ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ப்ளாக்பெர்ரி செல்போன்களின் அனைத்து தகவல்களையும் இடைமறித்துக் கேட்கும் வகையில் மாற்றங்கள் செய்தாக வேண்டும், இல்லாவிட்டால் ப்ளாக்பெர்ரிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும்' என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை விடப்பட்டதாகவும் அறிவித்தது.
ஆனால் ப்ளாக்பெர்ரி தயாரிப்பு நிறுவனமான கனடா நாட்டு ரிசர்ச் இன் மோஷன், தகவல்களை முழுமையாக இடைமறிக்க அனுமதிக்க முடியாது என்றும், குறிப்பிட்ட சில சேவைகளில் மட்டும் அத்தகைய இடைமறிப்புக்கு அனுமதிப்பதாகவும் கூறியது.
இப்போது, இதுகுறித்து ஆராயவும் எந்தெந்த வகையில் ப்ளாக்பெர்ரியின் சேவைகளை இடைமறித்துக் கேட்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி அடுத்த மாதம் கூடி இதுபற்றி விவாதிக்கிறது.
நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் தனது விரிவான அறிக்கையை இந்தக் குழு அளிக்கிறது. அதன் பிறகே, பிளாக்பெர்ரி போன் சர்வீஸ் விஷயத்தில் தனது இறுதி முடிவை மத்திய அரசு தெரிவிக்குமாம்!
எப்படியும் இதற்கு ஒரு ஆண்டுவரை கூட ஆகலாம் என்று கூறப்படுவதால், இப்போதைக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதியில் தடை குறித்த கவலையை கிடப்பில் போட்டுள்ளது பிளாக்பெர்ரி தயாரிப்பு நிறுவனம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications