காமன்வெல்த் போட்டியிலிருந்து இங்கிலாந்து முன்னாள் டைவிங் சாம்பியன் விலகல்
லண்டன்: காமன்வெல்த் போட்டியிலிருந்து இங்கிலாந்து முன்னாள் நீச்சல் (டைவிங்) சாம்பியன் பீட்டர் வாட்டர்பீல்ட் விலகியுள்ளார்.
அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது வீரர், வீராங்கனைகள் விலகல் தொடர் கதையாகியுள்ளது.
லேட்டஸ்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் காமன்வெல்த் நீச்சல் சாம்பியன் வாட்டர்பீல்ட் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. ஆனால் மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். 2006 போட்டியில் வெள்ளி வென்றவர் ஆவார்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார குளறுபடிகள் காரணமாக விலகியுள்ளாராம் வாட்டர்பீல்ட்.
ஏற்கனவே இங்கிலாந்து, கனடா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியிலிருந்து விலகியுள்ளது நினைவிருக்கலாம்.
தனது விலகல் குறித்து வாட்டர்பீல்ட் கூறுகையில், எனக்கு, மனைவி, 2 இளம் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் எனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுகின்றனர். அதை என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.
டெல்லி காமன்வெல்த் போட்டியில், 10 மீட்டர் தனிநபர் டைவிங், 10 மீட்டர் பிளாட்பார்ம் சின்க்ரொனைஸ்ட் டைவி்ங் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கவிருந்தார் வாட்டர்பீல்ட்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications