அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரும் மனு-தலைமை நீதிபதி தலைமையில் 3 நீதிபதிகள் விசாரிப்பர்
டெல்லி: அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்டுள்ள அப்பீல் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுவை முதலில் நீதிபதிகள் கபீர், பாதக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது. பின்னர் இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரவரம்பு இல்லை என்று கூறி அந்த பெஞ்ச் மறுத்து விட்டது.
இதையடுத்து நீதிபதிகள் எச்.எல்.கோகலே, ரவீந்திரன் அடங்கிய பெஞ்சுக்கு மனு விசாரணைக்கு சென்றது. இந்த பெஞ்ச் செப்டம்பர் 28ம் தேதி வரை தீர்ப்பை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. அதேசமயம், இரு நீதிபதிகளும் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அப்பீல் மனு 3வது பெஞ்சுக்குப் போகிறது. செப்டம்பர் 28ம் தேதி விசாரணைக்கு இந்த மனு வரும்போது அதை தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்.
கபாடியா தவிர நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த பெஞ்ச்சில் இடம் பெறுகின்றனர்.
அப்போது அரசு அட்டர்னி ஜெனரல் வாகனாவதி நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் முதல் வழக்காக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications