பீகார் சட்டசபைத் தேர்தல்-முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா : பீகார் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
பீகாரில் 6 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 21ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், நவம்பர் 20ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
பீகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நிதீஷ் குமாரை முன்னிறுத்தி ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஒரு பக்கமும், லாலு தலைமையில் ஒரு கூட்டணியும் களத்தில் நிற்கின்றன. காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கலையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications