சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் குப்பன். இவர் மனைவியைக் கொலை செய்து கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 7 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
இந்நிலையில் புழல் சிறையில் நேற்று தனது அறைக் கதவின் கம்பியில் தூக்குப் போட்டு குப்பன் தற்கொலை செய்துகொண்டார்.
தன்னை வந்து யாரும் பார்க்கவில்லையே என்ற விரக்தியில் குப்பன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications