சிட்டி குழும சிஇஓ விக்ரம் பண்டிட் சம்பளம் கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சிட்டி குழுமத்தின் சிஇஓ விக்ரம் பண்டிட் சம்பளம் கணிசமாக உயர்த்தப்படும் என அதன் தலைவர் ரிச்சர்டு பார்சன் தெரிவித்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தத்தில் சிக்கி சிட்டி குழுமமும் பெரும் நஷ்டத்துக்குள்ளானது. எனவே மீண்டும் வங்கி லாபப் பாதைக்குத் திரும்பும் வரை 1 டாலர் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார் விக்ரம் பண்டிட்.

இப்போது வங்கி மீண்டும் லாபம் ஈட்ட ஆரம்பித்துள்ளது.

எனவே விக்ரம் பண்டிட் உள்பட முக்கியமான 25 அதிகாரிகளுக்கு கணிசமாக சம்பளம் உயர்த்தப்படும் என்று சிட்டி குழும தலைவர் ரிச்சர்டு பார்ஸன் அறிவித்துள்ளார்.

"விக்ரம் பண்டிட் கடந்த காலங்களில் 1 டாலரை மட்டுமே சம்பளமாகப் பெற்றார். வங்கி லாபப் பாதைக்குத் திரும்பியுள்ளதால், அவரது இழப்புகளை ஈடுகட்டும் வகையில் அவருக்கு சம்பள உயர்வு தரப்படும்" என ரிச்சர்டு அறிவித்துள்ளார். ஆனால் சம்பளத் தொகை என்னவென்பதை மட்டும் அறிவிக்கவில்லை.

விக்ரம் பண்டிட்டை அடுத்து சிட்டி வங்கியின் நிறுவன குழும தலைவர் ஜான் ஹேவன்ஸுக்கு பெருமளவு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரொக்க சம்பளமாக மட்டும் 5 லட்சம் டாலர் வழங்கப்படுகிறது. இதுதவிர 9 மில்லியன் டாலர் மதிப்புக்கு பங்குகள் வழங்கப்படுகிறது.

இந்த சம்பள உயர்வில் குறிப்பிட்ட சதவீதம் நிறுவனத்தின் பங்குகளாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+