பெரிய கோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா-கருணாநிதி இன்று உரை
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை முதல்வர் கருணாநிதி நிறைவு பேருரை ஆற்றுகிறார்.
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கொண்டாட்டங்கள் கடந்த 22-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி இன்று முடிகிறது. இதையொட்டி தஞ்சையில் தினமும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு விழா மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் வடிவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் நடக்கிறது.
இதில் முதல்வர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார்.
நிகழ்ச்சியில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணயத்தை மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் வெளியிடுகிறார். இதை மத்திய அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார்.
இது தவிர தஞ்சை பெரியகோவில், ராஜராஜசோழன் புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது. இந்த தபால் தலையை மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியிடுகிறார். இதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications