கேம்ஸ் வில்லேஜில் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகி விட்டன-கல்மாடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேம்ஸ் வில்லேஜில் இருந்து வந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கேம்ஸ் வில்லேஜில் இருந்து வந்த அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. அனைத்து குடியிருப்புகளையும் தங்கும் அளவுக்கு தயார் படுத்தி விட்டோம்.
இப்போது அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். கிட்டத்தட்ட 1000 வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் இதுவரை வந்துள்ளனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். பெரும்பாலான வீரர்கள் திருப்தியுடன் உள்ளனர்.
80 சதவீத அபார்ட்மென்ட்கள் சிறப்பாக உள்ளன. தரைத்தளமும் காயத் தொடங்கியுள்ளது. என்னென்ன குறைகள் இருந்ததோ, அவற்றையெல்லாம் முடிந்தவரை சரி செய்து விட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications