3 மாதங்களுக்குப் பின் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஸ்ரீநகர்: வன்முறைக் களமாக மாறியுள்ள காஷ்மீரில் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
நேற்று காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்ப்பட்டது. இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் இன்றுதிறக்கப்பட்டன. ஆனால் வருகைப் பதிவு மிக மிக குறைவாகவே இருந்தது.
நேற்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், ஸ்ரீநகரின் பல பகுதிகள், பாராமுல்லா, குப்வாரா, சோபோர் ஆகிய பகுதிகளில் இன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேசமயம், பள்ளி மாணவர்களை பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு அழைத்து வர மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதேபோல கல்லூரிகளும் கூட இன்று காலை திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் கூட வருகைப் பதிவு குறைவாகவே இருந்தது.
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், இதை சீர்குலைக்க யாரும் முயல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications