தமிழகத்தில் ஆட்டோ கட்டண நிர்ணம்-போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை அரசே நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஆட்டோவில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். அதற்கு காரணம் தாறுமாறாக இருக்கும் ஆட்டோ கட்டணம். இந்நிலையில் ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் இமானுவேல் பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள மனுவில கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால் ஒரு ஆட்டோவில் கூட மீட்டர் என்பதே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர். வெறும் 1 கி. மீ. செல்ல வேண்டுமென்றாலும் குறைந்தது ரூ. 50 கொடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் வைத்ததே சட்டமாக உள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக மீட்டர் பொருத்தப்பட வேண்டும். மேலும், குறைந்த பட்சக் கட்டணம், தூரத்திற்கேற்ப கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இது குறித்து இன்னும் 3 வாரத்திற்குள் பதில் அளிக்க போக்குவரத்து துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications