வாசன் கோஷ்டிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் போராட்டம்
சென்னை: ஜி.கே.வாசன் கோஷ்டிக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் கோஷ்டியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் விழா சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் வாசன் ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
அதற்கு சிதம்பரம் ஆதரவாளரான சைதாப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்தமிழ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முத்தமிழ் மீது வாசன் ஆதரவாளர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மனு கொடுத்தார்.
முத்தமிழை கைது செய்யக்கோரி வாசன் ஆதரவாளர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் 64 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முத்தமிழ் இளைஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் சிதம்பரம் ஆதரவாளர்கள் கடும் கோபமடைந்தனர்.
நேற்று நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர்கள் அங்கு யுவராஜுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இது குறித்து தென் சென்னை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் பிரகாஷ் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் கட்சியின் மற்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று அவர் எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதை மீறி சைதாப்பேட்டை கூட்டத்தில் கட்சியின் மற்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தட்டிக் கேட்ட முத்தமிழ் தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்தும் எங்களுக்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தியே முற்றுகை போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
சிதம்பரம் கோஷ்டியினரின் இந்தப் போராட்டத்தால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அடிதடி, கலவரம் ஏதும் நடக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications