8 மாவட்ட கலெக்டர்கள்-10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஆபிரகாம் மாற்றப்பட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலாளராக உள்ள டி.கே.பொன்னுச்சாமி அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) பி.ஜோதி நிர்மலா இடமாற்றம் செய்யப்பட்டு சுனாமி நீடித்த வாழ்வாதார திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் மற்றும் வணிகவியல் கூடுதல் ஆணையாளராக உள்ள வி.சம்பத், சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிவகங்கை மாவட்ட கலெக்டராக உள்ள மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி கலெக்டர் டி.சவுண்டையா ஈரோடு கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை கமிஷனர் சி.என்.மகேஸ்வரன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக உள்ள ஜி.பிரகாஷ் மாற்றப்பட்டு, தொழில்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் எஸ்.மதுமதி மாற்றப்பட்டு, நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையாளராக (பணிகள்) பணிபுரிந்து வரும் ஆசீஷ் சாட்டர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக உள்ள சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு மாநில இளைஞர் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி திட்ட உறுப்பினர்-செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணிபுரிவார்.
கோவை வணிக வரிகள் இணை ஆணையாளராக பணியாற்றி வரும் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆர்.சுடலைக்கண்ணன் மாற்றப்பட்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை கூடுதல் செயலாளராக உள்ள டாக்டர் டி.கார்த்திகேயன் மாற்றப்பட்டு சென்னை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்துறை துணைச்செயலாளராக பணியாற்றி வரும் அனு ஜார்ஜ் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட சீனியர் கலெக்டராக பணிபுரிந்து வரும் பி.அமுதா மாற்றப்பட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வணிக வரிகள் இணை ஆணையாளராக பணிபுரிந்து வரும் டாக்டர் தாரேஷ் அகமத் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி துணை ஆணயாளராக (பணிகள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமைச் செயலாளரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications