தமிழக சட்டமன்றத் தேர்தல்: தயாராக பாஜக தேர்தல் குழு அமைப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பாஜக தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனே விடுத்துள்ள அறிக்கையில்,
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக தன்னை தயார்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய தலைமைக்கு வேட்பாளர்களை பரிந்துரைப்பது, தேர்தல் யுக்திகளை வகுப்பது உள்ளிட்ட தேர்தல் சம்மந்தமான பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளும் இக்குழுவில் இடம்பெறுவோர் விபரம் வருமாறு:
மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், சுகுமாரன் நம்பியார், லலிதா குமாரமங்கலம், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், மாநில துணைத் தலைவர்கள் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.சின்ராஜ் (கோவை),
மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.மோகன்ராஜூலு, சேலம் வி.ரமேஷ், ராமநாதபுரம் சுப.நாகராஜன், தூத்துக்குடி சரவண பெருமாள், மாநில செயலாளர் மதுரை எஸ்.சுரேந்திரன், மாநில மகளிர் அணித் தலைவி நாமக்கல் தமிழிசை யோகம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேலூர் கே.ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications