தேனி: தங்கபாலு கூட்டத்தில் ப.சிதம்பரம் ஆதரவாளருக்கு அடி-உதை
தேனி: தேனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளருக்கு அடி உதை விழுந்தது.
தேனி மாவட்ட காங்கிரஸ், நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. பெரியகுளம் எம்பி ஆருண் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த தங்கபாலுவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள், வைக்கப்பட்ட பேனர்களில் பல காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தாலும் ப.சிதம்பரத்தின் படம் இடம் பெறவில்லை.
இந்நிலையில் கூட்டம் தொடங்கியதும் கம்பம் ஒன்றிய காங்கிரஸ் தலைவரும் சிதம்பரம் ஆதரவாளருமான பால்பாண்டியன், மேடையில் ஏறி வந்து தங்கபாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அழைப்பிதழ், வரவேற்பு போஸ்டர்கள், பேனர்களில் ஏன் சிதம்பரத்தின் படம் இடம் பெறவில்லை என்று கோபமாகக் கேட்ட அவரை தங்கபாலு சமாதானப்படுத்த முயன்றார்.
ஆனாலம் பால்பாண்டியன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அவரை மேடையைவிட்டு இறக்க சிலர் முயன்றனர். தங்கபாலுவும் அவரை கீழே இறங்கச் சென்னார்.
ஆனால், பால்பாண்டியன் அடங்கவில்லை. தொடர்த்து கத்தி கூச்சல் போடவே அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் கீழே தள்ளிவிட்டு தொண்டர்களோடு சேர்ந்து அடித்து, உதைத்தனர்.
சிலர் அவர் மீது ஏறி மிதித்தனர். இதில் பால்பாண்டியனின் சட்டை, வேட்டி கிழிந்தது. இதையடுத்து அவர் நிலை குலைந்த நிலையில் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications