குளியலறையில் தடுமாறி விழுந்த புதுச்சேரி முதல்வர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தனது வீட்டில் குளியலறையில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தவர் கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கருணாநிதியின் உதவியாளருக்கு இதய ஆபரேஷன்:
இதற்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் கே.சண்முகநாதனுக்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் இருதய பை-பாஸ் சர்ஜரி நடந்தது.
அவரை முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications