ராஜபக்சே விருந்து... வற்புறுத்தி அழைத்தும் வராத தலைவர்கள்!

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார் ராஜபக்சே. இந்த நிகழ்வின் போது இலங்கை அதிபரை, உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லையாம்.
இந்த மாநாட்டையொட்டி இலங்கை ஒரு பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ள 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. ஆனால் ஒரே நாட்டு தலைவர் மட்டுமே விருந்துக்கு வந்திருந்தார். அவர் ஈரானின் முகமது அகமத் நிஜாதீன். தேர்தலில் பெரும் மோசடி செய்து ஆட்சியைப் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர் இந்த முகமத் என்பது குறிப்பிடத்தக்கது. விருந்து வந்த அவரும் கூட மூன்றே நிமிடம் மட்டும்தான் இருந்தாராம். சாப்பிடாமல் வெளியேறியுள்ளார் அவர்.
இலங்கையைத் தாங்கிப் பிடித்து, அதன் போர்க்குற்றத்தை மறைக்க உதவும் இந்தியா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட இந்த விருந்தைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
கடைசியில் இலங்கை அரசின் சிங்கள அதிகாரிகள்தான் கடைசியில் இந்த விருந்தைச் சாப்பிட்டு முடித்தார்களாம்.
இலங்கைக்கு இதுவரை இல்லாத பெரும் அவமதிப்பு இது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேபோல, ஐநா சபையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய போது தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. ராஜபக்சே பேசியபோது, அரங்கமே கிட்டத்தட்ட காலியாகிவிட்டிருந்தது. ராஜபக்சேயுடன் இணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூட யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்!
140 மில்லியன் டாலர் செலவு:
இந்தப் பயணத்தின்போது இலங்கை அதிபர் 130 பேரை உடன் அழைத்துச் சென்றாராம். அவர்களில் ராஜபக்சேக்கு மது பரிமாற மட்டுமே 5 காக்டெய்ல் 'நிபுணர்களும்' சென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்துக்கான மொத்த செலவு மட்டும் 140 மில்லியன் டாலர்கள் என்று ஸ்ரீலங்கா கார்டியன் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications