மதுரா கோட்ஸ் மில் ஊழியர்களுக்கு ரூ.2 கோடி தீபாவளி போனஸ்
வி.கே.புரம்: மதுரா கோட்ஸ் ஊழியர்களுக்கு ரூ. 2 கோடி தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இது வரும் 4-ம் தேதி பட்டுவாடா செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் வி.கே.புரம் மற்றும் தூத்துக்குடி, மதுரை, ஆகிய மூன்று இடங்களில் மதுரா கோட்ஸ் மில் இயங்கி வருகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு போனஸ் அக்டோபர் 4-ம் தேதி பட்டுவாடா செய்யப்படுகிறது.
வி.கே.புரம் மில்லில் மட்டும் நிரந்தரத் தொழிலாளர்கள் 1000 பேர் உள்ளனர். இவர்களுக்கு ரூ.80 லட்சம் போனஸ் வழங்கப்படுகிறது. 241 நாள் முதல் 284 நாள் வரை வேலை பார்த்தவர்களுக்கு ரூ.8,820-ம், 285 நாள் முதல் 309 நாள் வரை வேலை பார்த்தவர்களுக்கு ரூ.9,400-ம், 310 நாட்களுக்கு மேல் வேலை பார்த்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 3 மில்களிலும் சேர்த்து ரூ.2 கோடி போனஸ் வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலை நிர்வாகத்தின் தொழில் உறவு மேலாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications