இனி, உங்கள் செல்போனிலிருந்து தட்ஸதமிழ் இணையத்தளத்தை 'பிரவுஸ்' செய்யலாம்!

இதன் சிறப்பம்சம், கம்ய்பூட்டரில் பிரவுஸ் செய்வது போலவே உங்கள் செல்போனிலும் தட்ஸ்தமிழ் இணையத் தளத்தை முழுமையாக நீங்கள் பிரவுஸ் செய்து படிக்கலாம்.
இதனால் இணையத்தளத்தை படிக்க நீங்கள் கம்ப்யூட்டர் முன் தான் உட்கார்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும் பாக்கெட்டில் உள்ள செல்போனை எடுத்து இணையத்தளத்தை பார்க்கலாம்.
பல செல்போன்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி எழுத்துக்களை படிக்க இயலாத நிலை உள்ளது. இந்த பிரச்சனைத் தீர்க்க ஒரு சிறிய அப்ளிகேஷனை உங்கள் செல்போனில் 'டவுன்லோட்' செய்து கொண்டால் போதும்.
இந்த புதிய தொழில்நுட்பம் எழுத்துரு பிரச்சனைக்கு முடிவு கட்டுவதால், உள்ளூர்ச் செய்திகள், தமிழ் சினிமா செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை, அனைத்தையும் முழுமையாக உங்கள் செல்போனில் தமிழிலேயே பிரவுஸ் செய்து படிக்க முடியும்.
இந்த அப்ளிகேஷனை உங்களது செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இடம்: http://oneindia.newshunt.com
'நியூஸ்ஹன்ட்' எனப்படும் இந்த சேவையில் உள்ள பெரிய வசதி என்னவென்றால், வழக்கமாக செல்போன் மூலம் நீங்கள் செய்திகளைப் பெற சப்ஸ்கிரைப் செய்தால் வெறும் செய்தி தலைப்பு தான் உங்களைத் தேடி வரும். ஆனால் நியூஸ்ஹன்ட்டில் அப்படி இல்லை. அந்த செய்தி இடம் பெற்றுள்ள மொத்த இணையதளத்தையும் நீங்கள் பிரவுஸ் செய்து படிக்கலாம்.
இந்த நியூஸ்ஹன்ட் அப்ளிகேஷன் மூலம், தமிழ் மட்டுமல்லாமல், 'ஒன்இந்தியா'வின் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி இணையத் தளங்களையும் படிக்கலாம்.
இதற்கு உங்கள் செல்போன் இன்டர்நெட்டுடன் கூடிய ஜிபிஆர்எஸ் வசதி கொண்டதாக இருந்தால் போதும்.
மற்றபடி பிளாக்பெர்ரி உள்பட எந்த வகை செல்போன்கள் மூலமும் தமிழில் பிரவுஸ் செய்து படிக்க முடியும்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு மெயிலைத் தட்டி விடுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications