அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி: ஷியா முஸ்லீம் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

Ayodhya
லக்னெள: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஷியா பிரிவு முஸ்லீம் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹூசைனி டைகர்ஸ் என்ற இந்த ஷியா முஸ்லீம்கள் பிரிவு இளைஞர் அமைப்பின் தலைவர் சமீல் ஷஸ்மி கூறுகையில்,

அயோத்தி பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வருவது தான் அனைவருக்கும் நல்லது. இதனால் லக்னெள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தையும், முஸ்லீம் தனிச் சட்ட வாரியத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சி்ங் யாதவும், டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் சையத் அகமத் புகாரியும் இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது துரதிஷ்டவசமானது.

இந்தப் பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே பல முஸ்லீம் அமைப்புகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக முஸ்லீம் தனி சட்ட வாரிய நிர்வாகிகளை அணுகி பேசுவோம்.

லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், என்ன தீ்ர்ப்பு வந்தாலும் அதை ஏற்போம் என்று அனைத்துத் தரப்பினருமே கூறினார்கள். இப்போது அதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று சொல்வது தவறு.

பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொண்டு, அந்த இடத்தில் கோவிலையும் மசூதியையும் கட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் கைகோர்க்க வேண்டும். இதற்காக ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்.

அந்த வகையி்ல் கோவில் கட்ட எங்கள் அமைப்பு ரூ. 15 லட்சத்தை வழங்கும். அதே போல மசூதி கட்ட இந்து அமைப்புகளும் உதவ வேண்டும், இதில் இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

அகில இந்திய முஸ்லீம் தனிச் சட்ட வாரிய உறுப்பினரும் இந்தியாவின் மூத்த ஷியா பிரிவு தலைவருமான கல்பே ஜவ்வாத் தான் இந்த ஹூசைனி டைகர்சின் அமைப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+