மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் சேர்ப்பை தீவிரப்படுத்த திமுகவினருக்கு உத்தரவு
சென்னை : சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதி உடையவர்களை தேடிப் பிடித்து சேர்க்குமாறு திமுகவினருக்கு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் 6ம் தேதிக்குள் பெயர்களைச் சேர்க்கலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர்களைச் சேர்ப்பது குறித்து மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்ட மேலவைத் தேர்தல் தற்போது வெளியிடப்படும் பட்டியலை அடிப்படையாக வைத்துதான் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் சிறப்பு அக்கறையோடு இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்தப் பகுதிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications