ஷாப்பிங் போகணும்-இந்திப் படம் பார்க்கணும்: பாக். வீரர்களின் ஆசை!
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள டெல்லி வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாடுவதை விட ஷாப்பிங் போவதிலும், இந்திப் படம் பார்ப்பதிலும்தான் பெரும் ஆர்வம் காணப்படுகிறது.
டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி செளக்கில் சுற்றி வருவதும், இந்திப் படம் பார்ப்பதையும், இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்ப்பதிலும் அவர்கள் படு ஆர்வமாக உள்ளனராம். வாய்ப்பு கிடைத்தால் இதையெல்லாம் செய்து விட துடியாய் துடிக்கிறார்களாம்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ரெஹான் பட் கூறுகையில்,இந்தியாவிலிருந்து வரும்போது மறக்காமல் ஒரு நல்ல சேலை வாங்கி வர வேண்டும் என எனது மனைவி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக சாந்தினி செளக்கிலிருந்துதான் சேலை வாங்க வேண்டும் எனவும் அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
எனக்கும் கூட அஞ்சனா அஞ்சனி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. பார்க்கலாம், டைம் கிடைத்தால்தான் இதையெல்லாம் செய்ய முடியும் என்றார்.
இன்னொரு ஹாக்கி வீரரான அப்துல் ஹசீம் கான் கூறுகையில், இந்திய, பாகிஸ்தானிய மார்க்கெட்களுக்கிடையே நிறைய வித்தியாசம் இல்லை. இங்கு கிடைப்பதெல்லாம் அங்கும் கிடைக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் இந்தியாவிலிருந்து எதையாவது வாங்கிக் கொண்டு போக விரும்புகிறேன்
என்றார்.
அதேசமயம், டெல்லி தங்களுக்குப் புதிது என்பதால் விரும்பிய இடத்திற்குப் போவது சிரமம் என்றும் வீரர்கள் கருதுகிறார்கள். அதேசமயம் டெல்லியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications