கேரள லாட்டரி அதிபருக்கு ஆதரவாக வாதிட்ட விவகாரம்-சிங்விக்கு காங். ஆப்பு
டெல்லி: கேரளாவில் நடந்து வரும் லாட்டரி சீட்டு தொடர்பான வழக்கில் லாட்டரி அதிபர் சான்டியானோ மார்ட்டினுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியை அப்பொறுப்பிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது. கேரள காங்கிரஸாரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அது எடுத்துள்ளது.
கேரள லாட்டரி வழக்கில் லாட்டரிச் சீட்டு அதிபர்களுடன் இடதுசாரி அரசு கை கோர்த்து செயல்படுவதாக காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது. இந்த நிலையில் மார்ட்டினுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார் சிங்வி. இதனால் கேரள காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. மார்ட்டினுக்கு ஆதரவாக சிங்வி ஆஜரானதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டு விட்டதாக மேலிடத்தில் புலம்பினர் கேரள காங்கிரஸ் தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவரே, அதுவும் செய்தித் தொடர்பாளராக உள்ள ஒருவர் இடதுசாரி அரசுடன் கூட்டு வைத்துள்ள மார்ட்டினுக்கு ஆதரவாக வாதாடியதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் மேலிடத்தில்முறையிட்டனர்.
இதையடுத்து செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சிங்வியை கட்சி மேலிடம் நீக்கியுள்ளது. இப்போதைக்கு சிங்வி, செய்தித் தொடர்பாளராக செயல்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ட்டினுக்கு ஆதரவாக கொச்சியில் கடந்த வாரம் வழக்கில் வக்கீலாக ஆஜரானார் சிங்வி என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications