ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்
திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பல் கோவிலின் ஆதீனத்தை காரில் கடத்த முயன்றது. பொதுமக்கள் திரண்டதால் அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
திருப்போரூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாக 91 வயதான ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் உள்ளார்.
இந்த கோவிலுக்கு திருப்போரூர் மற்றும் சென்னை பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் 18.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.60 கோடி ஆகும்.
''இந்த நிலத்தை விற்று பணத்தை பாங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணம் மூலம் கோவிலை நிர்வகிக்க ஆதினம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்'' என்றும் கடந்த வாரம் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியானது.
ஆனால், இந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை என்று ஆதீனமும் கோவில் நிர்வாகிகளும் கூறிவிட்டனர். இதனால் நிலத்தை ஏதோ ஒரு கும்பல் சுருட்ட முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த மடத்துக்கு காரில் வந்த ஒரு கும்பல் ஆதீனத்தை கடத்திச் செல்ல முயன்றது.
இதைப் பார்த்த கோவில் ஊழியர்கள் அந்தக் கும்பலைத் தடுத்தனர். தகவல் அறிந்து ஊர் மக்களும் அங்கு விரைந்து வரவே அந்த மர்மக் கும்பல் தப்பிவிட்டது.
ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க முயன்ற கும்பல் தான் ஆதீனத்தை கடத்த முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆதீனம் தங்கியுள்ள மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications