நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை - அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குற்றாலம், ஐந்தருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, காரையாறு, கடனாநதி, அடவிநயினார் உள்ளிட்ட நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications