அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பணிகிறார்கள்-தப்புகிறது கர்நாடக பாஜக அரசு

எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 20 எம்.எல்.ஏக்களில் கணிசமான பேர் சமாதானமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தற்போது ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து மும்பை போனார்கள். தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து பெங்களூர் திரும்புவதாக தற்போது கட்சி மேலிடத்திற்குத்தகவல் அனுப்பியுள்ளனர்.
மேலும், எதியூரப்பா தங்களது தலைவர் என்றும், அவரது ஆட்சி கவிழ அனுமதிக்க மாட்டோம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தாங்கள் அவசியம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து எதியூரப்பாவே கூறுகையில், எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.தானும், பிற எம்.எல்.ஏக்களும் பெங்களூர் திரும்புவதாக அவர் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எனது அரசு வெற்றி பெறும் என்று நான் உறுதியாகநம்புகிறேன் என்றார்.
போர்க்கொடி உயர்த்திய எம்.எல்.ஏக்களில் கணிசமான பேர் சமாதானத்திற்கு முன்வந்திருப்பதால் அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கி விடும் என்ற நம்பிக்கைக்கு பாஜக வந்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் பிரச்சினைக்குக் காரணம் என பாஜகதரப்பு கடுமையாக குற்றம் சாட்டுகிறது. குமாரசாமியும், காங்கிரஸும் சேர்ந்துதான் எம்.எல்.ஏக்களை போர்க்கொடி உயர்த்துமாறு தூண்டி விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
குமாரசாமியுடன் சேர்ந்து பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸும் தீவிரமாக முயன்றது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக மாறப் போவதாக தகவல்கள் கிடைத்ததால், பயந்து போய் தனது கட்சியின் 50 முக்கிய எம்.எல்.ஏக்களை பெங்களூருக்கு அருகே தொட்டப்பல்லபூரில் போய் ரிசார்ட்டில் அடைத்து வைத்து விட்டது காங்கிரஸ். இன்னும் அவர்கள் பெங்களூர் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications